Enable Javscript for better performance
தமிழர் நலக் கழகத்தின் 22-ஆம் ஆண்டு பொங்கல் விழா- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் தமிழர் நலக் கழகத்தின் சார்பில் 22-ஆம் ஆண்டு பொங்கல் விழா மயூர் விஹார் பேஸ் 3-இல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
    இதையொட்டி,   பாரம்பரிய முறைப்படி பொங்கல் வழிபாட்டுடன் காலையில் தொடங்கிய விழா இரவு  வரை நடைபெற்றது. இவ்விழாவில் கோலப்போட்டி,   இசை நாற்காலி,  ஓவியப் போட்டி,  வினாடி-வினா,   நடனப்  போட்டி,  பாட்டுப்போட்டி கட்டுரைப்போட்டி ,  ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட  போட்டிகள் நடைபெற்றன. இதில் மகளிர்,  குழந்தைகள்   ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
    விழாவிற்கு  தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் நா.முருகானந்தம் தலைமை வகித்து,  போட்டிகளில் வெற்றிபெற்ற  குழந்தைகளுக்கு சான்றிதழ்,  பரிசுகள்  வழங்கி கௌரவித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க  உச்ச நீதிமன்ற வழக்குரைஞர், எஸ்.  நந்த குமார்,  தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் ரா.முகுந்தன் ஆகியோர் தமிழர் நலக் கழகம் நடத்தும் தமிழ்ப் பட்டறையில் பயின்று தமிழ்நாடு அரசு  அங்கீகாரம்பெற்ற 10- ஆம்,  8-ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்  வழங்கி பாராட்டினர்.
    நிர்மலா நந்த குமார்  10-ஆம் வகுப்பில் பயிலும் தமிழ் நலக் கழக மாணவர்களுக்கு பயிற்சிப் புத்தகங்களை  வழங்கினார். குழந்தைகள் பங்கேற்ற  கலைநிகழ்ச்சிகளும்,  பெண்களின் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.  விழாவில் கவுன்சிலர்  ஜுகுனு சௌத்திரி,  முன்னாள் கவுன்சிலர் ராஜீவ் வர்மா,  மனேஜ் குமார் எம்எல்ஏ, தில்லித் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த  எம். பால மூர்த்தி,  அவ்வை தமிழ்ச் சங்க நிர்வாகி டாக்டர் வளவன்,  அத்வைதா கன்சல்டன்ட்  விஜி,   மீனா வெங்கி  உள்பட  பலர் விழாவில் பங்கேற்றனர்.
    கழகத்தின் பொது செயலர் சிங்கத்துரை வரவேற்றார்.  தலைவர் சுப்பையா ஆண்டறிக்கை வாசித்தார்.  பாஸ்கரன் நன்றி கூறினார்.  சுமதி, பவானி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.  விழாவுக்கான ஏற்பாடுகளை  தமிழர்  நலக் கழக செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai