Enable Javscript for better performance
தலைநகரில் தூறல் மழை, அணிவகுப்பு ஒத்திகையால் போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தலைநகரில் தூறல் மழை, அணிவகுப்பு ஒத்திகையால் போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 24th January 2018 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லியில் செவ்வாய்க்கிழமை அடர் பனிமூட்டம், தூறல் மழை மற்றும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக பல இடங்களில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.தில்லியில் சில தினங்களாக காலை வேளையில் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. 
    இதனால், விமான சேவை, ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் பனி மூட்டம் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை இந்த சீசனின் சராசரியை விட இரு புள்ளிகள் குறைந்து 9.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் 84 சதவீதம் ஈரப்பதம் பதிவாதி இருந்தது. காண்பு திறன் 800 மீட்டராக குறைந்தது. 
    காலை 6 மணியளவில் ஏற்பட்ட கடும் பனி மூட்டம் காரணமாக வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 23 ரயில்கல் தாமதமாக வந்தன. இரு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 
    சாரல் மழை: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மேல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. மேகங்கள் சூழ்ந்து தூறல் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இம்மழைத்தூறல் நீடித்தது. தில்லி மட்டுமின்றி நொய்டா, குருகிராம், ஃபரீதாபாத் உள்ளிட்ட இடங்களிலும் தூறல் மழை பெய்தது. இதனால், தலைநகர் நகர் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
    சீருடை அணிவகுப்பு: இதனிடையே, குடியரசு தினத்தை ஒட்டி விஜய் சௌக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக செங்கோட்டைக்கு அணிவகுப்பு நடைபெறும் என்பதால், இதற்கான முழு சீருடை அணிவகுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்காக, நகரில் பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 
    ஒருபுறம் தூறல் மழை பெய்ததாலும், மறுபுறம் அணிவகுப்பு ஒத்திகைக்காக போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்ததாலும் நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். 
    அணிவகுப்பு ஒத்திகை காரணமாக தில்லி லுட்யன்ஸ் பகுதியில் உள்ள பல மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் பகுதிகளின் வாயில்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் பாதசாரிகள் மழையில் நடந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  குடியரசு தினமான 26-ஆம் தேதி சென்ட்ரல் செக்ரடேரியேட் மற்றும் உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் நள்ளிரவு முதல் நண்பகல் 12.30 மணி வரை மூடப்படும். 
    அதேபோன்று, பட்டேல்சௌக், ரேஸ் கோர்ஸ் மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் அன்றைய தினம் காலை 8.45 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரை மூடப்படும். இதே கட்டுப்பாடுகள் முழு சீருடை அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற செவ்வாய்க்கிழமையும் மேற்கொள்ளப்பட்டது.
    இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், "பட்டேல் சௌக் அருகே என்னுடைய அலுவலகம் உள்ளது. ஆனால், மெட்ரோ வெளியேறும் நுழைவு வாயில் மூடப்பட்டதால் ராஜிவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து என்னுடைய அலுவலகத்திற்கு நடந்து சென்றேன். ஆனால், மழையும் பிரச்னையுடன் சேர்ந்து கொண்டது' என்றார். 
    மற்றொரு பயணி அபிஷேக் குமார் கூறுகையில், "பாதுகாப்பு ஒத்திகை குறித்து நமக்கு தெரிந்தாலும்கூட மழையும், குளிரும் நடக்க முடியாத வகையில் சிரமத்தை ஏற்படுத்திவிட்டது' என்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai