கிழக்கு தில்லியில் உருமாற்றக் கட்டண முகாம்
By DIN | Published on : 25th January 2018 03:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வணிகர்கள் உருமாற்றக் கட்டணத்தை இலகுவாக செலுத்தும் வகையில், கிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பட்பர்கஞ்ச் பகுதியில் உருமாற்றக் கட்டணம் முகாம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
குடியிருப்புத் தளத்தை வணிகத் தளமாக மாற்றுவதற்கு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய உருமாற்றக் கட்டணத்தை செலுத்தத் தவறிய வணிக வளாகங்களுக்கு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப்படி, டிசம்பர் மாதம் 22- ஆம் தேதி முதல் சீலிடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உருமாற்றக் கட்டணத்தைச் செலுத்தாத வணிகர்கள் இலகுவாக உருமாற்றக் கட்டணத்தைச் செலுத்தும் வகையில் சிறப்பு உருமாற்றக் கட்டண முகாம் புதன்கிழமை நடத்தப்பட்டது. இந்த முகாமில் கலந்துகொண்டு கிழக்கு தில்லி மாநகராட்சி துணை மேயர் பிபின் பிகாரி சிங் பேசியதாவது:
வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உருமாற்றக் கட்டணத்தை இலகுவாக செலுத்தும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. உருமாற்றக் கட்டணத்தை இன்னமும் செலுத்தாத வணிகர்கள் இந்த முகாம் மூலம் செலுத்தி பயனடைய வேண்டும். இந்த முகாமில் உருமாற்றக் கட்டணத்தை எவ்வித தாமதமும் இல்லாமல் உடனடியாகச் செலுத்தலாம். இதனால் வணிகர்களின் நேரம் மிச்சப்படுத்தப்படும். மேலும், உருமாற்றக் கட்டணத்தை இலகுவாக செலுத்தும் வகையில் வங்கிகளின் உதவிகள் பெறப்பட்டுள்ளன என்றார் அவர்.