Enable Javscript for better performance
"சீலிங்' விவகாரம்: துணைநிலை ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    "சீலிங்' விவகாரம்: துணைநிலை ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சந்திப்பு

    By DIN  |   Published on : 25th January 2018 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீலிங் நடவடிக்கைகளிலிருந்து வணிகர்களைக் காக்கும் வகையில் "தில்லி மாஸ்டர் பிளான் -2021' விதிகளைத்தளர்த்த வேண்டும் என தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    இந்த விவகாரம் தொடர்பாக தில்லி சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தலைமையிலான சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை புதன்கிழமை சந்தித்தனர்.
    இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஜேந்தர் குப்தா கூறியது:
    மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் சீலிங் நடவடிக்கையில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, ஆண்டு உருமாற்றக் கட்டணம் செலுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது. 10 மடங்கு வருடாந்திர உருமாற்றக் கட்டணம் செலுத்துவது வணிகர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது. 1962-ஆம் ஆண்டுக்கு முன், குடியிருப்பு-வணிகம் என்ற பிரிவுகள் இல்லை. இதுபோன்ற 1962-ஆம் ஆண்டுக்கு முன் மேம்படுத்தப்பட்ட லாஜ்பத் நகர், ரஜெளரி கார்டன், திலக் நகர், கமலா நகர் போன்ற பகுதிகள் குடியிருப்புகளாகவும், வணிகம் சார்ந்த கட்டடங்களாகவும் உள்ளன. 
     எனவே, துணைநிலை ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தில்லி மாஸ்டர் பிளான் (2021) விதிமுறைகளில் திருத்தம் செய்து, தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். 
    மேலும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட 351 சாலைகளை வணிகம் சார்ந்ததாக தில்லி அரசு அறிவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்' என்றார் விஜேந்தர் குப்தா. இந்த சந்திப்பின்போது, தில்லி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்கள் ஜெகதீஷ் பிரதான், எம்.எஸ். சிர்ஸா, தில்லி வளர்ச்சி ஆணையத்தின் துணைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai