Enable Javscript for better performance
ஜன. 27 தில்லி அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஜன. 27 தில்லி அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக் கூட்டம்

    By DIN  |   Published on : 25th January 2018 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி அரசு பள்ளிகளில் வரும் ஜனவரி 27- ஆம் தேதி பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. 9,10,11,12 ஆகிய வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்காவும், அவர்களின் பெற்றோருக்காகவும் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாக தில்லி அரசின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: மாணவர்கள் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளில் பெறும் கல்வியே அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. இதனால், இந்த வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை. இதை கருத்தில் கொண்டு பெற்றோர்- ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
     இக்கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் தங்கள் குழந்தைகளின் கல்வித் தரத்தை புரிந்து கொண்டு, அவர்களின் கல்வி மேம்பாட்டில் பெற்றோர்கள் உரிய கவனத்தை செலுத்துவர். இக் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தில்லி அரசால் கூடுதல் வகுப்புகள் நடத்தப்பட்டன; பயிற்சி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. கல்வித் துறையால் பள்ளி முதல்வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai