Enable Javscript for better performance
டிடிஇஏ தமிழ்ப் பள்ளிகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தின விழா- Dinamani

சுடச்சுட

    

    டிடிஇஏ தமிழ்ப் பள்ளிகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தின விழா

    By DIN  |   Published on : 25th January 2018 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் (டிடிஇஏ) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
    இதையொட்டி, டிடிஇஏ அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் மும்மொழிகளில் உரை நிகழ்த்தினர். மாணவர்கள் நேதாஜி போல் வேடமணிந்து வந்து காண்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். 
     ஜனக்புரி, ஆர்.கே.புரம், லட்சுமிபாய் நகர், லோதி ரோடு, மோதிபாக் உள்பட டிடிஇஏவின் ஏழு பள்ளிகளிலும் பள்ளி முதல்வர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவப் படத்திற்கு மலர் மரியாதை செலுத்தினர்.
    பெண் குழந்தைகள் தினம்: இதேபோல, டிடிஇஏ பள்ளிகளில் புதன்கிழமை தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அப் பள்ளி முதல்வர்கள் பெண் குழந்தைகளின் உரிமை, கல்வி குறித்து எடுத்துக் கூறினர். மாணவர்கள் உரை மும்மொழிகளிலும் இடம் பெற்றது. லோதி வளாகம் பள்ளியில் மாணவர்கள் உரையைத் தொடர்ந்து ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களின் நாடகமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களையும் டிடிஇஏ செயலர் ஆர். ராஜு பாராட்டினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai