Enable Javscript for better performance
தொடரும் பனி மூட்டம்: 25 ரயில்கள் தாமதம், 18 ரயில்கள் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    தொடரும் பனி மூட்டம்: 25 ரயில்கள் தாமதம், 18 ரயில்கள் ரத்து

    By DIN  |   Published on : 25th January 2018 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை நிலவிய கடுமையான பனி மூட்டத்தின் காரணமாக வட மாநிலங்களுக்கு வரக்கூடிய 25 ரயில்கள் தாமதமாக வந்தன. 18 ரயில்களின் சேவை ரத்து ரத்து செய்யப்பட்டதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. 
    தற்போது பனிக்காலம் என்பதால் தில்லியில் காலை வேளைகளில் அடர் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் விமான சேவை, ரயில் சேவையில் தடங்கல் ஏற்படுகிறது. செவ்வாய்க்கிழமை பனிமூட்டத்துடன், தூறல் மழை மற்றும் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றதால் தலைநகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
    இந்நிலையில், புதன்கிழமையும் காலையில் பனி மூட்டத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது.
    செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இந்த சீசனின் சராசரியை விட இரு புள்ளிகள் குறைந்து 9.4 டிகிரி செல்சியஸும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸும் பதிவாகியிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாயிருந்தது. செவ்வாய்க்கிழமை தூறல் மழையின் காரணமாக புறச்சூழல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
    தில்லி தவிர நொய்டா, குருகிராம் பகுதிகளிலும் காலை வேளையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. பனிப் போர்வையை போர்த்தியிருந்தது போல பனி மூட்டம் காணப்பட்டது. 
    தில்லியில் புதன்கிழமை காலை 8.30 மணியளவில் காற்றில் 97 சதவீதம் ஈரப்பதம் பதிவாகி இருந்தது. சப்தர்ஜங் பகுதியில் காண்பு திறன் காலை 8.30 மணியளவில் 400 மீட்டராக குறைந்தது. காலை 6 மணியளவில் ஏற்பட்ட கடும் பனி மூட்டம் காரணமாக வட மாநிலங்களுக்கு வந்து செல்லக்கூடிய 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 25 ரயில்கல் தாமதமாக வந்தன. மூன்று ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 
    காற்றின் தரம் "மோசம்': தலைநகரில் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை மிகவும் மோசம் என்ற குறியீட்டுப் பிரிவில் இருந்ததது. இந்நிலையில், புதன்கிழமை காற்றின் தரத்தில் சற்று மேம்பாடு அடைந்தது. காற்றின் தரம் 259 குறியீட்டு மதிப்புடன் "மோசம்' என்ற பிரிவில் இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai