Enable Javscript for better performance
பவானா தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் கருணைத் தொகை வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    பவானா தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் கருணைத் தொகை வழங்கினார்

    By DIN  |   Published on : 25th January 2018 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி பவானாவில் அண்மையில் பட்டாசு ஆலையின் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கருணைத்தொகை காசோலைகளை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை நேரில் வழங்கினார்.
    பவானாவில் அண்மையில் பட்டாசு ஆலையின் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. வெடிபொருள்,  வெடி 
    மருந்துகளை பேக்கிங் செய்துகொண்டிருந்தபோது  தீவிபத்து ஏற்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்தது. 
    இந்தச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.  2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும்,  இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருந்தார். 
    அதன்படி,  தில்லி முதல்வர் கேஜரிவால் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து காசோலைகளை வழங்கினார். அப்போது,  தில்லி அரசிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அக்குடும்பத்தினருக்கு முதல்வர் கேஜரிவால் உறுதியளித்தார். 
    விபத்து நிகழ்ந்த இரு தினங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து  தில்லி முதல்வர் கேஜரிவால் கருணைத்தொகை காசோலைகளை வழங்கியதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai