Enable Javscript for better performance
பாட்டியா நீதிமன்றத்தில் 50 அடி உயர தேசியக் கொடி- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் 50 அடி உயரத்தில், எப்போதும் பறக்கக் கூடிய தேசியக் கொடியை தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
    இந்த நிகழ்ச்சியில் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன், நீதிபதி திங்ரா சேகல் ஆகியோர் பங்கேற்றனர்.
     இதுகுறித்து புது தில்லி வழங்குரைஞர்கள் சங்கத்தின் செயலர் நீரஜ் கூறுகையில், "பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் எப்போதும் பறக்கும் வகையில் தேசியக் கொடி அமைக்க வேண்டும் என்று புது தில்லி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய பொதுப் பணித்துறை இந்தப் பணியைச் செய்து கொடுத்துள்ளது. 
    விசாரணை நீதிமன்ற வளாகத்தில், 50 அடி உயரத்தில் எப்போதும் பறக்கும் வகையில் தேசியக் கொடி 
    அமைப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai