Enable Javscript for better performance
வடக்கு தில்லி மாநகராட்சியின் திருத்தப்பட்ட நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு தில்லி மாநகராட்சியின் திருத்தப்பட்ட நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை தாக்கல்  

    By DIN  |   Published on : 25th January 2018 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்கு தில்லி மாநகராட்சியின் 2017-18 நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை, 2018-19 நிதியாண்டுக்கான உத்தேச நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை ஆகியவை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
    வடக்குத் தில்லி மாநகராட்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் திலக் ராஜ் கட்டாரியா மாநகராட்சியின் 2017-18 நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை, 2018-19 நிதியாண்டுக்கான உத்தேச நிதிநிலை மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
    தொழில் வரி, முன்னேற்ற வரி, சொத்து வரி உள்பட எவ்வித வரிகளும் அதிகரிக்கப்படாது. மாநகராட்சியின் எல்லா வார்டுகளிலும் ரூ.10-க்கு உணவு வழங்கும் உணவுக் கூடங்கள் திறக்கப்படும். சத் பூஜையை சிறப்பாகக் கொண்டாட, வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட இடங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். பெண் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வரியில் 2 சதவீதம் சலுகை வழங்கப்படும். 2022- இல் சேரிகள் இல்லாத மாநகராட்சியாக வடக்கு தில்லி மாநகராட்சியை உருவாக்குவதற்கான சிறப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். தாற்காலிகமாக நடைபெற்றுவரும் துப்புரவுப் பணிகள் ஒழுங்குபடுத்தப்படும். பிச்சைக்காரர்கள் இல்லாத என்.டி.எம்.சி. யை உருவாக்கத் தேவையான உதவிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும். 
    ஒவ்வொரு வார்டிலும் நோயியல் ஆய்வகம் அமைக்கப்படும். மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவச மருத்துவத் திட்டம் ஆரம்பிக்கப்படும். டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். மாநகராட்சிப் பள்ளிகள் மேம்படுத்தப்படும். புதிய வகுப்பறைகள் கட்டப்படும். 
     மத்திய அரசின் நிதியுதவியுடன் என்.டி.எம்.சி. பகுதிகளில் 20,000 தெருவிளக்குகள் பொருத்தப்படும். ஜான்சி ராணி மேம்பாலம், கிஷான் கஞ்ச் ரெயில்வே சுரங்கப் பாதைப் பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும். பீதம்பூர் பகுதியில் ஷிவா மார்க்கெட்டில் 500 கார்களை நிறுத்தக்கூடிய வாகன நிறுத்துமிடமும், ராணி பார்க் பகுதியில் ரூ.74.4 கோடி மதிப்பில் வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai