Enable Javscript for better performance
வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் கடைகள், வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் கடைகள், வணிக வளாகங்களுக்கு சீல் வைப்பு

    By DIN  |   Published on : 25th January 2018 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களுக்கு புதன்கிழமை சீலிடும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 
    வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் அமைக்கப்பட்ட 60 கடைகள் சீலிடப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: 
    வடக்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்ட கடைகள் தொடர்ச்சியாக சீல் வைக்கப்பட்டு வருகின்றன.
    அந்த வகையில், வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட ஆசாத் மார்க்கெட் பகுதியில் 13 கடைகளும், சாலிமர் பாக் பகுதியில் 8 கடைகளும், ராணா பிரதாப் பாக் பகுதியில் 2 கடைகளும், ஓல்டு ராஜேந்தர் நகர் பகுதியில் 35 கடைகளும், மல்கா கஞ்ச் பகுதியில் 2 கடைகளும் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவுப்படி சீலிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
    தெற்கு தில்லி: தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 16 வணிக வளாகங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் புதன்கிழமை சீல் வைக்கப்பட்டன. இது தொடர்பாக மாநகராட்சிஅதிகாரிகள் கூறியதாவது: 
    தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட மாயாபுரி, திலக் நகர் ஆகிய பகுதிகளில் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டத்துக்குப் புறம்பான வகையில் கட்டப்பட்ட 16 வணிக வளாகங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் புதன்கிழமை சீல் வைக்கப்பட்டன. இவற்றில், தனியார் இரு சக்கர வாகன விற்பனை நிலையம், மருத்துவமனை ஆகியவை இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai