Enable Javscript for better performance
குடிநீரின் தரம்: உயரதிகாரிகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அழைப்பாணை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீரின் தரம்: உயரதிகாரிகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் அழைப்பாணை

    By DIN  |   Published on : 26th January 2018 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்கத் தவறியதற்காக, உள்ளாட்சி அமைப்புகளின் உயரதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
    தில்லியில் வீடுகளுக்கு மாசடைந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. 
    இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தில்லி குடிநீர் வாரியம், தில்லி கண்டோன்மென்ட் போர்டு, மத்திய நிலத்தடி நீர் ஆணையம், புது தில்லி முனிசிபல் கவுன்சில் ஆகியவற்றுக்கு பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே இரு முறை உத்தரவிட்டிருந்தது. 
    எனினும், அந்த உத்தரவை, மேற்கண்ட அமைப்புகள் பின்பற்றவில்லை.
    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் (பொறுப்பு) யு.டிசால்வி அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. 
    அப்போது, தில்லியில் குடிநீரின் தரம் தொடர்பான விவரங்கள் சமர்ப்பிக்கப்படாதது குறித்து வரும் 31-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, தில்லி குடிநீர் வாரியத் தலைமைச் செயல் அதிகாரி, தில்லி கண்டோன்மென்ட் போர்டு தலைமைச் செயல் அதிகாரி, புது தில்லி முனிசிபல் கவுன்சில் ஆணையர், மத்திய நிலத்தடி நீர் ஆணையத் தலைவர் ஆகியோருக்கு தீர்ப்பாயம் அழைப்பாணை அனுப்பியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai