Enable Javscript for better performance
சீலிங் நடவடிக்கைக்கு பாஜகதான் பொறுப்பு: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    சீலிங் நடவடிக்கைக்கு பாஜகதான் பொறுப்பு: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 26th January 2018 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீலிங் நடவடிக்கைக்கு பாஜகதான் பொறுப்பு என ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்துள்ளது. 
    இதுகுறித்து அக்கட்சியின் தில்லி பிரதேச ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய்,  தலைமை செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
    தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் சீலிங் நடவடிக்கை விவகாரத்தில் தில்லி வணிகர்களையும், பொது மக்களையும் குழப்பி வருகிறது.  உச்ச நீதிமன்றத்தைக் காரணம் காட்டி,  இந்த விவகாரத்தில் பாஜக தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. தில்லியில் தற்போது வசூலிக்கப்படும் உருமாற்றக் கட்டணத்தை வசூலிக்கமால் இருக்க மாநகராட்சிகளால் முடியும்.  இதுபோன்ற உருமாற்றக் கட்டணத்தை வசூலிக்காமல் இருந்தாலே வணிகர்கள் நிம்மதி அடைவார்கள். இந்த விவகாரத்தில் "தில்லி மாஸ்டர் பிளான் 2021' திட்டத்தையும் காரணமாக கூறுகின்றனர்.  தில்லி மாஸ்டர் பிளான் மத்திய அரசு, தில்லி வளர்ச்சி ஆணையத்தின்  கீழ் வருகிறது. இந்த மாஸ்டர் பிளான் திட்டத்தை மாற்றும் அதிகாரம் மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மட்டுமே உள்ளது. 
    உருமாற்றக் கட்டணம், பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் தில்லி மாநகராட்சிகள் இதுவரை ரூ. 3 ஆயிரம் கோடி வசூலித்துள்ளன. இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்பட்ட சந்தைகளில் எவ்வித வளர்ச்சிப் பணிகளையும் மாநகராட்சிகள் மேற்கொள்ளவில்லை.
    351 சாலைகளை வணிகம் சார்ந்த சாலைகளாக அறிவிக்கக் கோரும் மாநகராட்சிகளின் முன்மொழிவு தில்லி அரசுக்கு கடந்த 23-ஆம் தேதிதான் கிடைக்கப் பெற்றுள்ளது. இது தொடர்பான கோப்பை உச்ச நீதிமன்றத்துக்கு தில்லி அரசு அனுப்பி வைக்கும். ஆனால், தற்போது சீலிங் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள எந்தவொரு கடையும் இந்த 351 சாலைகளில் இல்லை. 
    மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த தற்போதைய தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் சீலிங் நடவடிக்கையில் வணிகர்களை காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  தில்லி மாஸ்டர் பிளான் திட்டத்தில் பல்வேறு குறைகள் களையப்படமால் உள்ளன. 
    சீலிங் நடவடிக்கைக்கு எதிராக வணிகர்கள் மேற்கொண்ட கடையடைப்பு உள்ளிட்ட போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவாக இருந்துள்ளது.  இந்த விவகாரத்துக்கு மத்திய அரசும், தில்லி மாநகராட்சிகளும் உடனடி தீர்வு காணாவிட்டால் ஜன. 29-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை ஆம் ஆத்மி நடத்தும்; போராட்டங்களையும் தீவிரப்படுத்தும்  என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai