Enable Javscript for better performance
டிடிஇஏ பள்ளிகளில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    தில்லி தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் (டிடிஇஏ) குடியரசு தினம்,  வாக்காளர் தின விழா  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டன. 
    குடியரசு தினம், வாக்காளர் தினம் ஆகியவற்றையொட்டி  டிடிஇஏ பள்ளிகளில் மும்மொழிகளிலும் மாணவர் உரை இடம் பெற்றது.  இதைத்தொடர்ந்து,  மாணவர்களின் குழுப் பாடல்,  நடனம்,  நாடகம் ஆகியவையும் இடம் பெற்றன. 
    அந்தந்த பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது டிடிஇஏ பள்ளி முதல்வர்கள் சித்ரா வாசகம் (ராமகிருஷ்ணபுரம்),  மீனா சகானி (லட்சுமிபாய் நகர்), காயத்ரி (மந்திர் மார்க்), ராஜி கமலாசணன் (ஜனக்புரி),  ஹரி கிருஷ்ணன்(மோதி பாக்),  சித்ரா ராதாகிருஷ்ணன் (முதல்வர் பொறுப்பு, பூசா சாலை),  ரஞ்சன் குப்தா (துணை முதல்வர், லோதி எஸ்டேட்)  ஆகியோர் மாணவர்களுக்கு  குடியரசு தினத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினர்.
    ஜனக்புரி பள்ளியில்  முன்னாள் மாணவர் மகேஷ்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  ஜனக்புரி பள்ளியின் இணைச் செயலர் சிவ்ராஜ், பெற்றோர்- ஆசிரியர்  சங்கத்தின் இணைச்செயலர் சிங்கார வேலு ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர். 
    லோதி வளாகம் பள்ளியில் பள்ளியின் இணைச் செயலர் முருகன்,  மந்திர் மார்க் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் இணைச் செயலர் மாரியப்பன், பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவர் வெங்கட சுப்பிரமணியன், இணைச்செயலர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர். 
    முன்னதாக,  டிடிஇஏ செயலாளர் ஆர். ராஜு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  இத்தகவல் டிடிஇஏ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai