Enable Javscript for better performance
தில்லியில் 40 லட்சம் மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் அரசியல் சாசன முகப்புரையை சுமார் 40 லட்சம் மாணவர்கள் வாசித்து உறுதிமொழியாக  வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டனர். 
    இது தொடர்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறியதாவது: தில்லியில் உள்ள 5, 000 பள்ளிகளில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.  இம்முறை வித்தியாசமாக இவ்விழா  கொண்டாடப்பட்டது. அதாவது,  40 லட்சம் மாணவர்கள் அரசியல் சட்ட முகப்புரையை வாசித்து உறுதிமொழி எடுத்தனர்.
    மாணவர்களுக்கு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா எழுதியுள்ள கடிதம் இந்த விழாவில் வாசிக்கப்பட்டது. அதில்,  இந்தியாவை வல்லசராக மாற்ற மாணவர்கள் முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சிவில் லைனில் உள்ள ராஜ்கியா பிரதிபா விகாஷ் வித்யாலயாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக மணீஷ் சிசோடியா கலந்துகொண்டு பேசியதாவது: கல்வியின் மூலமே சிறந்த இந்திய குடிமக்களை உருவாக்கலாம். மாணவர்களின் பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அரசியல் சட்ட முகப்புரை இடம்பெற்றுள்ளது.  அதை மாணவர்கள் தினம்தோறும் படிக்க வேண்டும்.
    கல்வியால் மட்டுமே சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான சம உரிமை மக்களுக்குக் கிடைக்கும்.  கல்வியின் மூலம் மாணவர்கள் அரசியலமைப்பு கூறும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  தில்லி பள்ளிகளில் குடியரசு தினம் கொண்டாடப்படுவதன் மூலம் மாணவர்களின் நாட்டுப்பற்று அதிகரிக்கும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai