Enable Javscript for better performance
தில்லி உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    மூத்த வழக்குரைஞர்களின் சொத்துக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தில்லி உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இது தொடர்பாக தில்லி உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கூறியதாவது: 
    விகாஷ் பாவா,  கிரித்தி உப்பல் ஆகிய மூத்த வழக்குரைஞர்களின் கார்களும், சொத்துக்களும் ஜனவரி 9 மற்றும் 22 ஆம் தேதிகளில் சேதமாக்கப்பட்டன. இதைக் கண்டித்து வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என புதன்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நீதிமன்ற நடவடிக்கைகளை வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை முழுவதும் புறக்கணித்தனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த கடைகளும் மூடப்பட்டன. 
    சொத்துக்கள் சேதப்படுப்படுத்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என வழக்குரைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.  வழக்குரைஞர்களைப் பயமுறுத்தும் நோக்கத்துடனேயே வழக்குரைஞர்களின் சொத்துக்கள் சேதமாக்கப்படுகின்றன.  காவல்துறையினர்,   முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருந்தாலும் கூட அவர்களின் நடவடிக்கை மெத்தனப்போக்காக இருந்தது.  இதுபோன்ற மிரட்டல்களால் நாங்கள் அடிபணிந்து போக மாட்டோம் என்று அச்சங்கத்தினர் கூறினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai