தில்லி விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்றவர் கைது
By DIN | Published on : 26th January 2018 12:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருள்களை கடத்த முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சுங்கத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு, பாங்காக்கில் இருந்து செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் வந்திறங்கிய ஒரு பயணியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர் வைத்திருந்த பையில், 76 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியும், தடை செய்யப்பட்ட மருந்துகளும் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.69 லட்சமாகும். அவை பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்த பயணியும் கைது செய்யப்பட்டார் என்று சுங்கத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.