Enable Javscript for better performance
"தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவேன்'- Dinamani

சுடச்சுட

    

    "தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவேன்'

    By DIN  |   Published on : 26th January 2018 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா செயல்திட்டத்தை எனது பதவிக் காலம் முடிவதற்குள் முழுமையாகச் செயல்படுத்துவேன்' என அதன் மேயர் ப்ரீத்தி அகர்வால் வியாழக்கிழமை தெரிவித்தார்.
    தில்லி மாநகராட்சி விதியின்படி முதலாவது ஆண்டுக்கான மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதன்படி,  வடக்கு தில்லி மாநகராட்சியின் மேயராக பாஜகவின் ரோகிணி கவுன்சிலர் ப்ரீத்தி அகர்வால் 2017- ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றார். அவருடைய பதவிக் காலம் 2018,  மே மாதம் அதாவது இன்னும் மூன்று மாதங்களில் முடிவடைய உள்ளது.
    இந்நிலையில்,  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  2016 ஆம் ஆண்டு மே மாதம் நான் மேயராகப் பொறுப்பேற்றபோது வடக்கு தில்லி மாநகராட்சி சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. வடக்கு தில்லி மாநகராட்சியில் உள்ள பொதுக் கழிப்பிடங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. நான் மேயராக பொறுப்பேற்று சில மாதங்களில் வடக்கு தில்லி மாநகராட்சியின் 104 வார்டுகளிலும் போதுமான கழிப்பிடங்ளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தேன். இதனால், திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகராட்சியாக கடந்த டிசம்பர் மாதம் 31- ஆம் தேதி வடக்கு தில்லி மாநகராட்சி அறிவிக்கப்பட்டது. 
    இக்கழிப்பிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு,  மிக விரைவில் மக்களின் பயன்பாட்டுக்காக 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படவுள்ளன. பொது இடங்களில் மலம், சிறுநீர் கழித்தலுக்கு எதிராக "ரோகோ டோகோ சீதி பஜோ'  பிரசாரத்தை முழு வீச்சுடன் மேற்கொண்டு வருகிறோம்.  தூய்மை இந்தியா தரப்பட்டியலில் வடக்கு தில்லி மாநகராட்சி இடம்பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.  மேலும்,  வடக்கு தில்லி மாநகராட்சியின் நிதி வளங்களைப் அதிகரித்து,  மாநகராட்சியின் நிதி ஆதாரங்களை அதிகரிப்பேன் என்றார் அவர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai