Enable Javscript for better performance
பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலி; 3 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலி; 3 பேர் காயம்

    By DIN  |   Published on : 26th January 2018 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். 
    இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
    வடக்கு தில்லி புராரி பகுதியில் இருந்து தில்லி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்,  புராரி பகுதியில் உள்ள பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் சிலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், காயமடைந்த நபர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
    இதில் இருவர் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    இது தொடர்பாக புராரி காவல் நிலையத்தினர் நடத்திய விசாரணையில்,  டிராக்டர் ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்ததால் 20 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ நேரிட்டதும், இந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவர் புராரியில் உள்ள நாதுபுரா பகுதியைச் சேர்ந்த ராஜ்கிஷோர் (30) என்பதும் தெரியவந்தது. 
    மேலும்,  சரஸ்வதி சிலையை நீர் நிலையில் கரைப்பதற்காக தனது நண்பர்களுடன் ராஜ் கிஷோர்  டிராக்டரில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவரது சகோதரர் கூறியதாகவும்,  மேல் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai