Enable Javscript for better performance
பள்ளி வாகன ஓட்டுநரை சுட்டுவிட்டு மாணவனை கடத்திய மர்ம நபர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி வாகன ஓட்டுநரை சுட்டுவிட்டு மாணவனை கடத்திய மர்ம நபர்கள்

    By DIN  |   Published on : 26th January 2018 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரைப்படத்தில் வரும் சம்பவம் போல தில்லியில் பட்டப் பகலில் பள்ளி வாகனத்தின் ஓட்டுநரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு 1-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் கடத்தப்பட்டான்.  தலைக் கவசம் அணிந்த இரு மர்ம நபர்கள் இந்த துணிகரச் செயலில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தில்லி காவல் துறையினர் வியாழக்கிழமை கூறியதாவது:
    தில்லியின் தில்ஷாத் கார்டன் பகுதியில் உள்ள பள்ளியில் 1-ஆம் வகுப்பு மாணவன் தனது சகோதரியுடன் பள்ளி 
    வாகனத்தில் வியாழக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தான்.  அந்த வாகனம் ஷாதரா பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே வந்தபோது,  பின்னால் கறுப்பு நிற மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர்,  வாகனத்தின் ஓட்டுநரை மிரட்டி நிறுத்துமாறு கூறினார்.  அவர் மறுக்கவே,  மோட்டார் சைக்கிள் பின்புறம் அமர்ந்திருந்த மர்ம நபர் ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
    இதையடுத்து, பேருந்துக்குள் நுழைந்த அந்த மர்ம நபர்கள்,  அங்கு அமர்ந்திருந்த 1-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கடத்திக் கொண்டு தாங்கள் வந்த வாகனத்திலேயே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் நோக்கிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்த தகவலின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து சிறுவனைக் கடத்திச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். 
    இதற்காக தனிப் படையும் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவன் குறித்து நன்கு தெரிந்தவர்கள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிறுவனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவன் கடத்தப்பட்ட பிறகு கடத்திச் சென்றவர்களிடம் இருந்து சிறுவனின் பெற்றோருக்கு  தொலைபேசி ஏழைப்பு ஏதும் வரவில்லை. இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
    குடியரசு தினத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ள தில்லியில் இச்சம்பவம் பட்டப் பகலில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai