Enable Javscript for better performance
கடும் பனி: 35 ரயில்கள் தாமதம், 18 ரயில்கள் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வெள்ளிக்கிழமை காலை கடும் பனி மூட்டம் நிலவியது.
    இதன் காரணமாக, பல பகுதிகளில் இருந்து வட மாநிலங்களுக்கு வரக்கூடிய 35 ரயில்கள் தாமதமாக வந்தன. 18 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
    தில்லியில் தற்போது பனியின் தாக்கம் காலை வேளைகளில் அதிகமாகவும், பகல் வேளைகளில் சற்று தணிந்தும் காணப்படுகிறது.
    இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தில்லியில் மழைத்தூறல் பெய்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையிலும் இதன் தாக்கம் காணப்பட்டது.
    குறைந்தபட்ச வெப்பநிலை இந்த சீசனின் சராசரியை விட இரு புள்ளிகள் குறைந்து 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காலை 8.30 மணியளவில் காண்புதிறன் 50 மீட்டர்களுக்கும் குறைவாக இருந்தது. காற்றில் 100 சதவீதம் ஈரப்பதம் காணப்பட்டதாக வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர்.
    தில்லி தவிர நொய்டா, குருகிராம் பகுதிகளிலும் காலை வேளையில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. பனி மூட்டம் காரணமாக தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு வரும் 35 ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன.
    18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இரு ரயில்களின் புறப்பாடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
    அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் இருந்தபோதிலும் அதைப் பொருள்படுத்தாமல் தில்லி ராஜபாதை பகுதியில்
    நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai