Enable Javscript for better performance
திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது: ரூ.6 லட்சம் செல்லிடப்பேசிகள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது: ரூ.6 லட்சம் செல்லிடப்பேசிகள் மீட்பு

    By DIN  |   Published on : 27th January 2018 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் செல்லிடப்பேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து புறநகர் மாவட்ட காவல் துணை ஆணையர் எம்.என். திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    புறநகர் தில்லி, நிஹல் விஹார் காவல் நிலைய போலீஸார் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் சம்பவத்தன்று நிஹால் விஹார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 50 அடி சாலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் திருட்டு செல்லிடப்பேசிகளை விற்பதற்காக சுற்றிக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    இதையடுத்து, அந்த இடத்திற்கு போலீஸார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் நிஹால் விஹார் பகுதியைச் சேர்ந்த தீபக் (எ) தீபு (22) என்பதும், செல்லிடப்பேசி திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
    ஜனவரி 4-ஆம் தேதி ஷிவ் ராம் பார்க் பகுதியில் ஒரு கடைக்குப் புகுந்து தனது கூட்டாளி மணீஷுடன் சேர்ந்து 44 விலை உயர்ந்த செல்லிடப்பேசிகளை தீபக் திருடியிருந்தது தெரியவந்தது.
    அவரிடமிருந்து 20 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.6 லட்சமாகும் என போலீஸ் அதிகாரி திவாரி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai