Enable Javscript for better performance
தில்லி தமிழ் அமைப்புகள் சார்பில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் நாட்டின் 69-ஆவது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    தில்லி தமிழ்ச் சங்கம்: தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சங்கத்தின் இணைச் செயலர் பாலமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் இணைப் பொருளாளர் கே. கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.சம்பத்குமார், எஸ். லட்சுமணன், எம்.ஆறுமுகம், எஸ்.மகேந்திரன், டி.பெரியசாமி, டி.சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    செந்தமிழ்ப் பேரவை சார்பில்: மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் செந்தமிழ்ப் பேரவை சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு சங்கத்தின் செயலர் ஏ.மாரி தலைமை வகித்தார். பேனா நண்பர் பேரவை அமைப்பாளர் ஏ.பிரமநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். செந்தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் தர்ஷன் வரவேற்றார். கோகுல கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஏ.எம். ஆறுமுகம் நன்றி கூறினார்.
    இந்த விழாவுக்கானஏற்பாடுகளை பேரவையின் துணைத் தலைவர் பி.முத்துரமேஷ், இணைச் செயலர்கள் கே. கிரண்பாலாஜி, எஸ்.கிருஷ்ணராஜ், துணைப் பொருளாளர் எஸ்.சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.அன்புபாண்டியன், பி.சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
    குடியிருப்போர் சங்கம்: மயூர்விஹார் ஃபேஸ் 3-இல் உள்ள பாக்கெட் பி பகுதியைச் சேர்ந்த பார்க் வியூ அபார்ட்மென்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
    இந்த விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் மனோஜ் குமார் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai