Enable Javscript for better performance
லோதி எஸ்டேட் டிடிஇஏ பள்ளியில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    லோதி எஸ்டேட் டிடிஇஏ பள்ளியில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

    By DIN  |   Published on : 27th January 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) லோதி எஸ்டேட் பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஊழல் ஒழிப்பு உறுதிமொழியை வியாழக்கிழமை எடுத்துக் கொண்டனர்.
    இதுகுறித்து டிடிஇஏ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    நேர்மையின் சிறப்பை மாணவர்கள் உணர்ந்து ஊழலற்ற ஒரு உன்னத எதிர்கால சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்துடன் (ஆர்இசி) இணைந்து லோதி வளாகம் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அடங்கிய குழுவை டிடிஇஏ செயலர் ராஜு ஏற்படுத்தியுள்ளார்.
    இந்த குழுவின் தொடக்க விழாவில் ஆர்இசி சார்பாக அப்பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் புத்தகப் பைகள், தொப்பிகள் வழங்கப்பட்டன.
    இவற்றை மாணவர்களுக்கு வழங்கி டிடிஇஏ செயலர் ஆர். ராஜு பேசுகையில், "நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில்தான் உள்ளது. நமது நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல ஊழலை ஒழிக்க வேண்டும். அதற்கு நேர்மையுடன் வாழ்வதற்கு பழக வேண்டும்' என்றார்.
    இதைத் தொடர்ந்து, பள்ளியின் துணை முதல்வர் ரஞ்சன் குப்தா, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் இணைந்து ஊழலை ஒழிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியை பிரியா கர்க் மாணவர்களுக்கு ஊழல் பற்றி எடுத்துரைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai