Enable Javscript for better performance
70 சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவு அரங்கு: சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் கேஜரிவால் திறந்துவைத்- Dinamani

சுடச்சுட

    

    70 சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவு அரங்கு: சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் கேஜரிவால் திறந்துவைத்தார்

    By DIN  |   Published on : 27th January 2018 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசு தினத்தையொட்டி, தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் பகத் சிங், பிர்ஸா முண்டா, சுபாஷ் சந்திரபோஸ், திப்பு சுல்தான் உள்ளிட்ட 70 சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்கள் இடம்பெற்ற நினைவு அரங்கு திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இந்த அரங்கைத் திறந்து வைத்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:
    குடியரசு தினத்தில் சுதந்திர போராட்ட வீரர்களையும், சுதந்திரத்துக்காக இன்னுயிர் நீத்த தியாகிகளையும், அரசியல் அமைப்பு சட்ட உருவாக்கத்தையும் நினைவுகூறுகிறோம். கடும் போராட்டத்துக்குப் பிறகு கிடைக்கப் பெற்ற சுதந்திரத்தை போற்றி பாதுகாக்க வேண்டும். நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்கள் வைத்து பார்க்கும்போது சுதந்திரத்தை போற்றி பாதுகாக்க வேண்டியதன் அவசியம் உருவாகிறது.
    சுதந்திரமடைந்த இந்தியா குறித்து அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர்களுக்கும், சுதந்திரத்துக்காக போராடியவர்களுக்கும் கனவுகள் பல இருந்தன. அதில் சுதந்திரமடையும் இந்தியா கல்விபெற்றதாகவும், அனைவருக்கு சமமான அதிகாரம் கிடைக்கும் எனவும் சாதி, மத, இன வேறுபாடுகள் மறையும் எனவும் அவர்கள் கனவு கண்டனர்.
    சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அரசியல் நடைபெறும் என யாரும் நினைத்து பார்த்து இருக்கமாட்டார்கள்.
    நாட்டில் அதிக அளவில் பள்ளிகளைத் திறப்பதும், குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிப்பதும், அதிக அளவில் மருத்துவமனைகளைத் திறப்பதும், ஏழை- பணக்காரகர் இடைவெளியை குறைப்பதும், உள்கட்டமைப்புத் திட்டங்களை தயார் செய்வதும், சாலைகளை அமைப்பதும், மேம்பாலங்களை கட்டுவதும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்குவதுமே உண்மையான தேசப் பக்தியாகும்.
    தினசரி வாழ்க்கையை வாழ்வதற்கே பலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. வணிகம் செய்வதில் சிக்கல்கள் உருவாகி வருகின்றன. விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வணிகர்களும், தொழிலாளர்களும், துயரத்தில் உள்ளனர்.
    சமூகத்தில் அமைதியும், சமாதானமும் ஏற்படாவிட்டால் நாட்டின் வளர்ச்சி ஏற்படாது.
    மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து வாழ்ந்தால்தான் நாடு வளர்ச்சியை காணும்' என்றார் கேஜரிவால்.
    நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் பேசியதாவது: சுதந்திர போராட்ட வீரர்கள் பலரது பெயர்களை கேட்டிருப்போம். அவர்களின் புகைப்படங்களை கண்டிருக்க மாட்டோம். எனவே, இங்கு அமைக்கப்படும் சுதந்திர போராட்ட தியாகிகளின் அரங்கு மூலம் புகைப்படங்களையும், பெயர்களையும் காண முடியும். இங்கு திப்புசுல்தான் படத்தை வைக்க பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது முறையல்ல. சுதந்திர போராட்டத்தில் திப்புசுல்தானில் பங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
    துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பேசுகையில், "ராஜ்புத் சமுதாய தலைவர்களுடன் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை வியாழக்கிழமை பார்த்தேன். திரைப்படம் ராஜ்புத் சமூகத்துக்கு எதிரானதாக இல்லை என தலைவர்கள் தெரிவித்தனர். இதனால், திரைப்படத்துக்கு எதிராக கலவரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகள் தண்டிக்கப்பட வேண்டும்' என்றார்.
    விழாவில் சட்டப்பேரவை துணைத் தலைவர் ராக்கி பிர்லா, ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை செயலாளர் பிரசன்ன குமார் தேவரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai