Enable Javscript for better performance
அரசியல் ஆதாயம் தேட ஆம் ஆத்மி, காங்கிரஸ் முயற்சி: பாஜக குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    அரசியல் ஆதாயம் தேட ஆம் ஆத்மி, காங்கிரஸ் முயற்சி: பாஜக குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 28th January 2018 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீலிங் நடவடிக்கையை வைத்து அரசியல் ஆதாயம் தேடவே ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் முயற்சிப்பதாக தில்லி பாஜக பொதுச் செயலர் குல்ஜீத் சிங் சாகல் சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.
    இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தில்லியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதன் மூலம், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு சீலிங் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணம் இல்லை என்பது தெளிவாகிறது.
    அவர்கள் இந்த சீலிங் நடவடிக்கையை வைத்து அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கின்றனர். அவர்களின் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். சீலிங் நடவடிக்கைகக்கு தீர்வுகாணும் வகையில் தில்லி பாஜகவினர் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். ஜனவரி 29- ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் சீலிங் நடவடிக்கை தொடர்பாக தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி பேசவுள்ளார் என்றார் அவர். 
    உச்ச நீதிமன்றத்தில் முறையீடு: மூன்று மாநகராட்சிகளின் மேயர்கள் ப்ரீத்தி அகர்வால், நீமா பகத், கமல்ஜீத் ஷெராவத் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீலிங் நடவடிக்கையை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் மூன்று மாநகராட்சி சார்பிலும் மிக விரைவில் தாக்கல் செய்யப்படும். இதனால், சீலிங் நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
    பேட்டியின்போது, தெற்கு, வடக்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகள் அவைத் தலைவர்கள் முறையே ஷிக்கா ராய், ஜெயேந்தர் தபஸ், சந்தோஷ் பால் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai