Enable Javscript for better performance
ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சீலிங் நடவடிக்கைக்கு எதிராக வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளின் தலைமை அலுவலகமான சிவிக் சென்டர் வளாகத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் சனிக்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கட்சியின் தலைவர்கள் ஜர்னைல் சிங், அனில் வாஜ்பாய் கூறியதாவது:
    தில்லியின் முக்கியச் சந்தைப் பகுதிகளில் தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் சீலிங் நடவடிக்கை நியாயமற்றது. திறமையற்ற மாநகராட்சிகளின் நிர்வாகங்களால் வணிகர்களின் வாழ்வாதாரம் பறிபோவது அனுமதிக்க முடியாது. சீலிங் நடவடிக்கைக்கு பின்னால் இருப்பது மாநகராட்சிகளின் திறமையின்மையும், ஊழலும் ஆகும். 
    2006-ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக ரூ. 2,700 கோடி அளவுக்கு உருமாற்றக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதை தில்லி மாநகராட்சிகள் மறுக்க முடியாது. 
    இந்த விவகாரத்தில் தில்லி வளர்ச்சி ஆணையமும், ஆணையத்தின் தலைவராக உள்ள தில்லி துணைநிலை ஆளுநரும் மெளனம் சாதித்து வருகின்றனர். கண்முன்னே வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை துணைநிலை ஆளுநர் பார்த்து வருகிறார். 
    சீலிங் நடவடிக்கைக்கு காரணமாக உள்ள உருமாற்றக் கட்டணத்தை தில்லி மாநகராட்சிகள் உடனே திரும்பப் பெற வேண்டும். தில்லி மாநகராட்சிகளும், தில்லி வளர்ச்சி ஆணையமும் வணிகர்களுக்கு தொல்லை அளித்து, பணம் பறித்து வருகின்றன. மத்திய அரசு கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, நிரந்த தீர்வு காண வேண்டும். 
    உருமாற்றக் கட்டண விவகாரத்தில் சதுர மீட்டருக்கு ரூ. 90 ஆயிரமாக இருந்த கட்டணத்தை ரூ. 22 ஆயிரமாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையால் குறைக்க முடிந்தது. 
    ஏன் உருமாற்றக் கட்டணத்தை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய முடியவில்லை?
    சீலிங் நடவடிக்கை விவகாரத்துக்கு தீர்வு காண தொடர்ந்து ஆம் ஆத்மி போராடும். வரும் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது' என்றனர். 
    முன்னதாக, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கட்சியின் தில்லி அலுவலகம் அமைந்துள்ள தீன தயாள் உபாத்யாய மார்கிலிருந்து சிவிக் சென்டர் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியின்போது சீலிங் நடவடிக்கைக்கு எதிரான பாதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai