Enable Javscript for better performance
எஸ்டிஎம்சி பள்ளிகளில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழி வகுப்புகள் விரைவில் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    எஸ்டிஎம்சி பள்ளிகளில் பிரெஞ்சு, ஜெர்மன் மொழி வகுப்புகள் விரைவில் தொடக்கம்

    By DIN  |   Published on : 28th January 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) பள்ளிகளில் பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய அயல்நாட்டு மொழிகள் விரைவில் கற்பிக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 
    மாநகராட்சிப் பள்ளிகளில் அயல்நாட்டு மொழிகளைக் கற்பிக்கும் திட்டம் தெற்கு தில்லி மாநகராட்சியால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி சுபாஷ் நகர், கட்கரி, சுரேகா ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 
    இந்நிலையில், எஸ்டிஎம்சியின் மாநகராட்சிப் பள்ளிகளில் மிக விரைவில் ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய அயல்நாட்டு மொழி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:
    சுபாஷ் நகர், கட்கரி, சுரேகா ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஜப்பான் மொழி கற்பிக்கப்படுகிறது. மாணவர்களும் ஆர்வமாக ஜப்பான் மொழியை கற்று வருகின்றனர். பிற மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்பிக்க உள்ளோம்.
    தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இக்கற்பித்தல் செயல்முறை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆறாம் வகுப்பில் இருந்து அயல்நாட்டு மொழிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படவுள்ளன. காலப்போக்கில், 4- ஆம் வகுப்பில் இருந்து அயல்நாட்டு மொழி வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. பிற மொழிகளைத் தெரிந்து வைத்திருத்தல் மாணவர்களின் எதிர்காலத்துக்கு உதவும். மாணவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கவும் உதவும். 
    இந்த மொழி வகுப்புகள் மாணவர்களால் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் ஒவ்வொரு வாரமும் சில மணி நேரங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai