Enable Javscript for better performance
சாக்கடைக்குள் முதியவரை தள்ளிவிட்ட வழக்கு: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    சாக்கடைக்குள் முதியவரை தள்ளிவிட்ட வழக்கு: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

    By DIN  |   Published on : 28th January 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாக்கடைக்குள் முதியவரைத் தள்ளிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
    இதுகுறித்த வழக்கு விவரம் வருமாறு:
    தில்லியைச் சேர்ந்த 66 வயது முதியவர் கடந்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி கிழக்கு தில்லியில் உள்ள அரசுப் பள்ளி முன் தனது மகனுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு ராமன் (37) என்பவர் வந்தார். அவர் முதியவரிடமிருந்து ரூ.500 நோட்டை பறிக்க முயன்றார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ராமன் முதியவரை செங்கலால் தாக்கி, சாக்கடைக்குள் தள்ளிவிட்டார்.
    இதில், முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 22-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இது குறித்து ராமன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ராமனுக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
    இந்த வழக்கு தில்லி கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது ஆஜரான குற்றம்சாட்டப்பட்ட ராமன், "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. போலீஸார் என் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்' என்று முறையிட்டார். 
    இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு கூடுதல் நீதித் துறை நீதிமன்ற நீதிபதி சதிந்தர் குமார் கௌதம் அளித்த தீர்ப்பின் விவரம்:
    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு குற்றத்தில் ஈடுபடுவதற்கான உள்நோக்கம் இல்லாதபோதிலும், அவரது செயல் முதியவருக்கு இறப்பை ஏற்படுத்த காரணமாக இருக்கும் என்பது தெரிந்திருக்கிறது. 
    இதனால், அவரது குற்றத்தின்தன்மையானது கொலையில்லா மரணத்தை விளைவிக்கும் குற்றத்தின் சட்டப் பிரிவின்கீழ் வருகிறது. இதனால், இந்தியத் தண்டனைச் சட்டம் 304 பிரிவு இரண்டின்படி குற்றம்சாட்டப்பட்டவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது' என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai