Enable Javscript for better performance
தமிழ்நாடு இல்லம் பொறியாளரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு இல்லம் பொறியாளரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை

    By DIN  |   Published on : 28th January 2018 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளரிடம் நான்கு மர்ம நபர்கள் துப்பாக்கியால் மிரட்டி பணம், செல்லிடப்பேசியை வழிப்பறி செய்தனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:
    தமிழகத்தின் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சத்தீஸ் பிரபு குமார். இவர் தில்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். சரோஜினி நகர் பகுதியில் காரை நிறுத்திவிட்டு இறங்கினார்.
    அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு மர்ம நபர்கள் அவரது கார் முன் தங்களது வாகனத்தை நிறுத்தினர். பின்னர் அவரை துப்பாக்கியால் மிரட்டி அவரிடமிருந்து ரூ.40 ஆயிரம் ரொக்கம், அவரது காரில் இருந்த செல்லிடப்பேசி ஆகியவற்றை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. 
    இதுகுறித்து தில்லி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, சப்தர்ஜங் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai