Enable Javscript for better performance
தில்லியில் கடும் பனி மூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் சனிக்கிழமை அதிகாலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் சாலை போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
    சாலையில் சூழ்ந்திருந்த கடும் பனியால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை ஓட்டினர். காண்புதிறன் குறைவாக இருந்த காரணத்தால் ரயில்களின் புறப்பாடு, வந்து சேரும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
     சனிக்கிழமை காலை தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. வெள்ளிக்கிழமை அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக இருந்தது. சனிக்கிழை காலை பனி மூட்டமாக காணப்பட்டாலும், மதியம் நேரத்தில் வானம் தெளிவாக காட்சியளித்தது. 
    காற்றில் ஈரப்பதம் 97 டிகிரியாக இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai