Enable Javscript for better performance
முதல்வர் கேஜரிவால் இல்லம் அருகே காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: பவானா தீ விபத்து விவகாரம்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் கேஜரிவால் இல்லம் அருகே காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: பவானா தீ விபத்து விவகாரம்

    By DIN  |   Published on : 28th January 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பவானா தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி மகளிர் காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் தில்லி மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷர்மிஸ்தா முகர்ஜி பேசுகையில், "பவானா தீ விபத்தில் பலியான பெண் தொழிலாளர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கு நீதி கேட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பவானா தொழிற்பேட்டை தில்லி மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் வருகிறது. இந்த தொழிற்பேட்டையில் தொழிற்சாலை தொடங்க தில்லி மாநகராட்சியின் உரிமம் பெற வேண்டும். 
    இதுபோன்ற சூழலில் பவானா தீ விபத்தில் தில்லி அரசோ, வடக்கு தில்லி மாநகராட்சியோ பொறுப்பு ஏற்காமல் பரஸ்பரம் சாக்குபோக்கு கூறி வருகின்றன. தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் 12 மணிக்கு அதிகமாக நீண்ட நேரப் பணிக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
    தில்லியில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 15 ஆயிரமாக இருக்க இந்த தொழிற்சாலையில் மாதம் ரூ. 5 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. 
    மத்திய, மாநில தொழிலாளர் நலத்துறை வழங்கும் சலுகைகள் பெண் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. பவானா தீ விபத்தில் பலியான பெண் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்' என்றார் ஷர்மிஸ்தா முகர்ஜி.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் தில்லி மகளிர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த அமர்லதா சங்வான், பிரவீண் மாசி, இஷ்ரத் ஜஹான், குர்மீத் கெளர், சாய் அனாமிகா, இந்து சூரி, சந்தியா அகர்வால், புஷ்பா கோலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai