Enable Javscript for better performance
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று நகை, பணம் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று நகை, பணம் கொள்ளை

    By DIN  |   Published on : 28th January 2018 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடக்குத் தில்லி ஷாலிமர் பாகில் வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டியை மர்ம நபர்கள் கொன்றுவிட்டு, அலமாரியில் இருந்த நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: ஷாலிமர் பாக் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் சிங். இவரது மனைவி ராஜ்ரானி (75). இத்தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். ஜஸ்வந்த் சிங் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன்கள் இருவரும் அதே பகுதியில் தனித் தனியாக குடியிருந்து வருகின்றனர். 
    முன்று மாடிக் குடியிருப்பின் கீழ் பகுதி வீட்டில் ராஜ்ரானி தனியாக வசித்து வந்தார். மற்ற இரு மாடிகளும் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. 
    இந்நிலையில், சம்பவத்தன்று ராஜ்ரானி வீட்டில் தனியாக இருந்தார். அவரது மகன் மிக்கி பிற்பகலில் தாய் ராஜ்ரானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பலமுறை அழைத்தும் ராஜ்ரானி பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து தனது தாயின் வீட்டுக்கு நேரில் சென்றார்.
    அப்போது வீட்டு அறையில் ரத்தக் காயங்களுடன் மூதாட்டி ராஜ்ரானி இறந்து கிடந்தார். அவரது கழுத்து கத்தியால் 
    அறுக்கப்பட்டிருந்தது. அலமாரியில் இருந்து சில நகைகள், பணம் காணாமல் போயிருந்தது. இதையடுத்து, காவல் துறையினருக்கு மிக்கி தகவல் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். 
    அப்போது, மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றதும், இதைத் தடுக்க முயன்ற ராஜ்ரானியை அவர்கள் கொலை செய்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அப்பகுதியில் அண்மையில் குழாய் பழுது வேலை செய்த நபர்கள் சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 
    கொலை செய்யப்பட்ட நபருக்கு ஏற்கெனவே தெரிந்த நபர்கள் ஏதும் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai