Enable Javscript for better performance
1,000 புதிய பேருந்துகளை வாங்க ஏலம் அறிவித்தது தில்லி அரசு- Dinamani

சுடச்சுட

    

    1,000 புதிய பேருந்துகளை வாங்க ஏலம் அறிவித்தது தில்லி அரசு

    By DIN  |   Published on : 28th January 2018 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியின் பொது போக்குவரத்தை மேம்படுத்த 1,000 புதிய கிளஸ்டர் பேருந்துகளை வாங்குவதற்கான பணிகளை தில்லி அரசு தொடங்கி உள்ளது.
    இதுகுறித்து தில்லி போக்குவரத்துத் துறை அதிகாரி சனிக்கிழமை கூறுகையில், "தில்லியின் நான்கு பகுதிகளில் 1,000 புதிய கிளஸ்டர் பேருந்துகளை இயக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 1,648 கிளஸ்டர் பேருந்துகள் தில்லியில் இயக்கப்பட்டு வருகின்றன. இதை தில்லி அரசும், ஐடிஎப்சியும், தில்லி ஒருங்கிணைந்த பன்நோக்கு போக்குவரத்து மையமும் (டிஐஎம்சிஎஸ்) இணைந்து செயல்படுத்தி வருகின்றன. தற்போது 1,000 புதிய பேருந்துகளை வாங்குவதற்கான ஏலத்தை நடத்துவதற்கு  டிஐஎம்சிஎஸ்-க்கு தில்லி அரசு அதிகாரம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.
    தில்லியில் கிளஸ்டர் பேருந்துகளைத் தவிர 3,900 தில்லி போக்குவரத்து நிறுவனப் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. மேலும், தில்லியின் பொதுப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்த 2,000 சாதாரண பேருந்துகளை வாங்கவும் தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai