Enable Javscript for better performance
கனாட் பிளேஸில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    தில்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
    இதுதொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அந்த வர்த்தக கட்டடத்தின் 11-ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள்,  தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 20 நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ இல்லை.
    ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai