Enable Javscript for better performance
குருகிராம் வன்முறை:  38 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சர்ச்சைக்குரிய பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக குருகிராமில் நடைபெற்ற போராட்டங்களின்போது, வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள "பத்மாவத்' திரைப்படத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி  பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு தடைகளுக்கு பின், அந்த திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதையடுத்து, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில், ராஜ புத்திர அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
    பள்ளி வாகனம் மீது தாக்குதல்: குருகிராமில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, 25 குழந்தைகளுடன் சென்றுக் கொண்டிருந்த தனியார் பள்ளியின் வாகனம் மீது கற்கள், கம்புகளை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் எந்த குழந்தைக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல, அரசு பேருந்து ஒன்றுக்கும் தீவைக்கப்பட்டது.
    இச்சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குருகிராம் காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ரவீந்தர் குமார் தெரிவித்தார்.
    முன்னதாக, பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வரும் கர்னி சேனை அமைப்பின் குருகிராம் பிரிவு தலைவர் தாக்கூர் குஷால்பாலிடம் காவல்துறையினர் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai