Enable Javscript for better performance
"சீலிங்' நடவடிக்கைக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றம் நோக்கி  இன்று பேரணி: ஆம் ஆத்மி- Dinamani

சுடச்சுட

    

    "சீலிங்' நடவடிக்கைக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றம் நோக்கி  இன்று பேரணி: ஆம் ஆத்மி

    By DIN  |   Published on : 29th January 2018 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீலிங் நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி திங்கள்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    சீலிங் நடவடிக்கை விவகாரத்தில் பாஜக தரப்பில் தொடர்ந்து குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது.  
    உருமாற்றக் கட்டணம் செலுத்தாமல் இருப்பதும், தில்லி மாஸ்டர் பிளான் திட்டமும் தற்போதைய  சீலிங் நடவடிக்கைக்கான காரணங்கள் என ஆம் ஆத்மி தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறது. 
    உருமாற்றக் கட்டணத்தை தில்லி மாநகராட்சியும்,  மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் தில்லி வளர்ச்சி ஆணையமும் நினைத்தால் தள்ளுபடி செய்ய முடியும். இரண்டுமே பாஜக கட்டுப்பாட்டில் உள்ளன. 
    இதுபோல, மாஸ்டர் பிளான் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவதும் தில்லி வளர்ச்சி ஆணையத்தில் கையில்தான் உள்ளது. நிலைமை இவ்வாறு உள்ளபோது ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக தொடர்ந்து குழப்பம் விளைவித்து வருகிறது.  சீலிங் நடவடிக்கை விவகாரத்தில் தில்லி அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. 
    சனிக்கிழமை நடைபெற்ற தில்லி மாநகராட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திலும் நாடகம் அரகேற்றப்பட்டுள்ளது. 
    சீலிங் நடவடிக்கைக்கு 6 மாதங்களுக்கு தடை விதிக்க வேண்டும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை முறையிட வேண்டும்,  மாஸ்டர் பிளான் விவகாரத்தை தில்லி அரசு மத்திய அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    உச்ச நீதிமன்றத்தை நாடுவதும்,  சீலிங் நடவடிக்கையை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக பலமுறை மாநகராட்சிகள் கூறியுள்ளன. இந்த விவகாரத்துக்கு தீர்வுகாண தில்லி வளர்ச்சி ஆணையமும், மத்திய அரசுமே மட்டுமே தலையிட முடியும். 
    சீலிங் நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி திங்கள்கிழமை நடைபெறும்.  
    இதையொட்டி,  காலை 10 மணி அளவில் படேல் சௌக் மெட்ரோ ரயில் நிலையம் முன் ஒன்றுகூடி, 11 மணி அளவில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வோம். இந்த விவகாரத்தை, நாடாளுமன்றத்தில் முக்கியப் பிரச்னையாக எழுப்புவோம்.
    சீலிங் நடவடிக்கை தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வலியுறுத்துவோம்.  இப்பிரச்னையில் தீர்வு காண  தில்லி வளர்ச்சி ஆணையத்தின் தலைவரும்,  தில்லி துணைநிலை ஆளுநருமான அனில் பய்ஜாலை  சட்டப்பேரவை உறுப்பினர்கள் திங்கள்கிழமை பிற்பகல் சந்திக்க உள்ளனர்' என்றார் செளரவ் பரத்வாஜ். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai