Enable Javscript for better performance
ஜிஎஸ்டி: தமிழக வணிகர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும்- Dinamani

சுடச்சுட

    

    ஜிஎஸ்டி: தமிழக வணிகர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கும்

    By DIN  |   Published on : 29th January 2018 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சரக்கு, சேவை வரியால் (ஜிஎஸ்டி)  தமிழக வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதுதொடர்பாக, பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக குரலெழுப்பும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக சார்பில் எழுப்பப்பட உள்ள கோரிக்கைகள் தொடர்பாக 
    தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 
    ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழக வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வரி விதிப்பால் சிவகாசி பட்டாசுத் தொழில்,  திருப்பூர் பின்னலாடைத் தொழில் ஆகியவை முடங்கியுள்ளன. 
    "ஒக்கி' புயலில் காணாமல்போன மீனவர்களை மீட்க மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஒக்கி புயலால் ரப்பர், வாழைத் தோட்டங்கள் முழுவதும் அழிந்துள்ளன.  இந்த விவகாரங்களை, பட்ஜெட் தொடரில் திமுக எழுப்பும்.
    மத்திய அரசால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்படும். தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு சென்று கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாகவும்,  "நீட்' தேர்வு  பிரச்னை குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும். 
    நாடு முழுவதும் பெட்ரோல்,  டீசல் விலை அதிகரித்துள்ளது. விலைவாசியும் உயர்ந்துள்ளது. இப்பிரச்னைகள் குறித்தும்,  மகளிர் மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்றும் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்படும்.
    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தின்போதும் மகளிர் மசோதாவை அமல்படுத்துமாறு திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது என்றார் அவர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai