Enable Javscript for better performance
நாட்டில் கடந்த ஆண்டு விற்பனையான வாகனங்களில் 7 சதவீதம் தில்லியில் பதிவு: புள்ளிவிவர  தகவல்- Dinamani

சுடச்சுட

    

    நாட்டில் கடந்த ஆண்டு விற்பனையான வாகனங்களில் 7 சதவீதம் தில்லியில் பதிவு: புள்ளிவிவர  தகவல்

    By DIN  |   Published on : 29th January 2018 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த  ஆண்டு இந்தியாவில் விற்பனையான வாகனங்களில் 7 சதவீதம் வாகனங்கள் தில்லியில் பதிவு செய்யப்பட்டிருப்பது  அரசின் புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
    தேசியத் தலைநகர் தில்லியில் சுமார் ஒரு கோடி வாகனங்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  நிகழாண்டு ஜனவரியில் மட்டும் தில்லியில் தினமும் 2,500 வாகனங்கள் சராசரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசின் தேசிய வாகனங்கள் தரவுதள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. 
    2017-ஆம் ஆண்டில் தில்லியில் சராசரியாக 1, 975 வாகனங்கள் தினமும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது,  கடந்த ஆண்டு நாட்டில் விற்பனையான வாகனங்களில் 7 சதவீதம்  தில்லியில் பதிவாகி இருப்பதாக தரவுத்தளம் தகவல் தெரிவிக்கிறது.
    இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "தில்லி சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தில்லியில் வேலை செய்யும் அதிகமான மக்கள் புறநகர் பகுதிகளில் வசித்து வருகின்றனர். அவர்களது வாகனங்கள் ஹரியாணா, உத்தரப் பிரேதசம் போன்ற தில்லியின் அண்டை மாநிலங்களில் பதிவு செய்யப்படுகின்றன.  தில்லியின் அருகாமை பகுதிகளில்  வாகனங்களின் பதிவும் சேர்வதால் தில்லியின் வாகனப் போக்குவரத்து கவலைச் சூழலை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.
    வாகன தரவுத் தகவலின்படி தில்லியில் பதிவாகும் வாகனங்களில் 65 சதவீதம் வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் ஆகும். இருசக்கர வாகனங்களின் தேசிய அளவு பங்களிப்பு சுமார் 75 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், "கடைசி மைல் வரை பொதுப் போக்குவரத்து தொடர்பு வசதி மக்களுக்கு கிடைக்காதவரை,  தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக் கொள்வார்கள் என அரசு எதிர்பார்க்க முடியாது ' என்றார்.
    போக்குவரத்து வல்லுநர் அனில் சிக்காரா கூறுகையில், "முக்கிய நகரங்களில் பொதுமக்கள் வேலைக்காக மத்திய வணிக மாவட்டங்களுக்கு பயணம் செய்வது வழக்கம்.  தில்லி அதுபோல் அல்லாமல் சில தனித்துவ  பண்புகளைக் கொண்டுள்ளது.  
    தில்லியில் பல திசைகளுடன்கூடிய வாகனப் போக்குவரத்து உள்ளது.  இதனால், பொதுப் போக்குவரத்து போதுமானதாக இருப்பதில்லை.  நகரின் கடைசி மைல் தூரம் வரை போக்குவரத்து தொடர்பு வசதி அவசியமாகிறது' என்றார்.
    அறிவியல், சுற்றுச்சூழல் மையம் கடந்த ஆண்டு ஒரு ஆய்வை நடத்தியது. அதில்,  தில்லியின் 13 முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை வேளை உச்ச  சராசரி வேகம் மணிக்கு 28 கி.மீ. மற்றும் 25 கி.மீட்டராக இருப்பதும்,  மற்ற நேரங்களில் வேகம் மணிக்கு 27 கிலோ மீட்டராக இருப்பதும் கண்டறியப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai