Enable Javscript for better performance
புராரி வாகனப் பரிசோதனை மையத்தை தானியங்கி மையமாக மாற்ற திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புராரி வாகனப் பரிசோதனை மையத்தை தானியங்கி மையமாக மாற்ற திட்டம்

    By DIN  |   Published on : 29th January 2018 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள புராரி வாகன தகுதிப் பரிசோதனை மையத்தை முற்றிலும் தானியங்கி மையமாக மாற்றுவதற்கு தில்லி அரசின் போக்குவரத்துத் துறை திட்டமிட்டு வருகிறது.  இதற்கான முன்மொழிவு தில்லி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி அரசின் வட்டாரங்கள் தெரிவித்தன.
    இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறையின் அதிகாரி கூறியதாவது:
    தில்லி புராரியில் அரசுப் போக்குவரத்து துறையின் சார்பில்  வாகனங்களின் தகுதியைப் பரிசோதிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஆட்டோ, டாக்ஸி,  ஊரக போக்குவரத்து வாகனங்கள் போன்ற சிறிய ரக வாகனங்கள் மனிதர்கள் மூலம் தகுதி பரிசோதனை செய்யப்படுகின்றன.
    தற்போது தகுதி சோதனைக்காக 300 வாகனங்கள் வந்து செல்கின்றன.  இந்நிலையில், இதை முற்றிலும் தானியங்கி மையமாக மாற்ற திட்டமிடப்பட்டு வருகிறது.  இதற்கான முன்மொழிவு தில்லி அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதிக்குப் பிறகு இதற்கான பணிகள் தொடங்கும். 
    தில்லியில் பெரிய வாகனங்களுக்கான முதல் தானியங்கி தகுதி பரிசோதனை மையம் ஜுலிஜுலி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த மையத்தில் லாரிகள்,  பேருந்துகளுக்கு தகுதிப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  
    தானியங்கி முறையில் வாகனங்களின் பிரேக்,  கிளட்சுகள்,  முகப்பு விளக்குகள், சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றை துல்லியமாக தகுதி பரிசோதனை செய்ய முடியும்.  மேலும்,  இயந்திரங்கள்,  கணினிகள் மூலம் வாகனங்களின் தகுதியை மதிப்பீடு செய்யப்படுகின்றன என்றார் அந்த அதிகாரி. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai