Enable Javscript for better performance
பொது இடங்களில் 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள்: கேஜரிவால்- Dinamani

சுடச்சுட

    

    பொது இடங்களில் 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள்: கேஜரிவால்

    By DIN  |   Published on : 29th January 2018 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் பெண்கள் பாதுகாப்புக்காக பொது இடங்களில் 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக அவர் தனது சுட்டுரையில் சிசிடிவி திட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
    பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் மிகப் பெரிய நடவடிக்கையாக தில்லியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தலைநகர் தில்லியில் உள்ள பொது இடங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும். 
    இதற்காக 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான ஒப்பந்தங்களை பொதுப் பணித் துறை கோரியுள்ளது.  
    ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 2 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இரவு நேரத்தில் தெளிவாக காட்சிகளைப் பதிவு செய்யும் திறன் கொண்ட  இந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் 4 மெகா பிக்ஸல் திறனுயுடையவை. 
    கேமராக்களில் பழுது ஏற்பட்டால் அதுதொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் வாயிலாக செய்தி வரும்'  எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai