Enable Javscript for better performance
மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன்- Dinamani

சுடச்சுட

    

    மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன்

    By DIN  |   Published on : 29th January 2018 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக மீனவர் பிரச்னைகள் குறித்து திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குரலெழுப்புவேன் என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா தெரிவித்தார்.
    இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவாதம் தொடர்பாக நடப்பு  பட்ஜெட் கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் எதுவும் குறிப்பிடவில்லை. அரசுப் பணிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினருக்கு  பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா என்ன ஆனது என்பது குறித்து தெரியவில்லை.
    நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர்-பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சூழலில் வன்கொடுமை சட்டம்,  வன உரிமைச் சட்டம் ஆகியவை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. "ஒக்கி' புயலில் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தமிழக மீனவர்களின் துயரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மீனவர் நலன்களைக் காக்க தனி அமைச்சகம் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். 
     தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வுகாண கச்சத் தீவு உடன்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உயர் மட்ட நீதித்துறையில் நெருக்கடி உள்ளது. இதுபோன்ற சூழலில் அரசியல் அமைப்புச் சட்டம் சரியில்லை எனவும், அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றவே தற்போதைய அரசு உள்ளது எனவும் அமைச்சர்களே பேசி வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு மத்திய அரசு சொல்ல வருவது என்ன?  என கேள்வியெழுப்பினார் டி.ராஜா.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai