Enable Javscript for better performance
மேம்பாலங்களை ஆய்வு செய்ய  பொதுப் பணித் துறை உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி அரசின் பொதுப் பணித்துறையின் பராமரிப்பின்கீழ் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் கள ஆய்வு செய்ய வேண்டும் என்று அதன் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    அண்மையில் இரு பாலங்களில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பொதுப் பணித்துறை உத்தரவிட்டுள்ளது. 
    தில்லியில் கடந்த மாதம் லாஜ்பத் நகர் மேம்பாலத்தின் ஐந்து தூண்களில் ஒன்றின் இடையே 10 அடி நீளத்தில்,  8 முதல் 10 அங்குலம் அகலத்தில் இடைவெளி இருப்பது கண்டறியப்பட்டது. 
    இதையடுத்து,  மோட்டார் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்தப் பகுதியை பழுதுபார்க்கும் வரை வேறு வழியில் செல்லுமாறு தில்லி காவல் துறையினர் அறிவுறுத்தினர். 
    பாலத்தில் ஏற்பட்ட இடைவெளியைப் பழுதுபார்க்கும் பணி ஒரு மாதமாக நடைபெற்றது.  இந்நிலையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் அக்ஷர்தாம் பகுதி மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  
    இந்த இரு விரிசல் சம்பவங்களைத் தொடர்ந்து தில்லியில் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் உடனடியாக கள ஆய்வு செய்ய வேண்டும் என்று துறைப் பொறியாளர்களுக்கு தில்லி அரசின் பொதுப் பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
    இதுகுறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், "பாலத்தில் ஏற்பட்ட விரிசல்களைத் தொடர்ந்து, தில்லி பொதுப் பணித்துறை அதன் பொறியாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில்,  தில்லியில் உள்ள அனைத்து பாலங்களின் இணைப்புகள், பேரிங்குகளை கள ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
    தவிர, ஏதாவது விரிசல் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அதைச் சரி செய்யும் பணியை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai