Enable Javscript for better performance
லாலா லஜபதி ராய் பிறந்த தினம்: நாடாளுமன்றத்தில் மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    லாலா லஜபதி ராய் பிறந்த தினம்: நாடாளுமன்றத்தில் மரியாதை

    By DIN  |   Published on : 29th January 2018 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதி ராயின் பிறந்த தினத்தை ஒட்டி,  தில்லியில் நாடாளுமன்ற  மைய அரங்கில் அவரது திருவுருவப் படத்திற்கு தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினர். 
    இதையொட்டி,  நாடாளுமன்ற மைய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள லாலா லஜபதி ராயின் ஆளுயர திருவுருவப் படத்திற்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்,  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல், முன்னாள் துணைப் பிரதமரும், மக்களவை நெறிகள் குழுவின் தலைவருமான எல்.கே. அத்வானி,  மனித வள மேம்பாட்டு துறை தொடர்பான  நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் டாக்டர் சத்ய நாராயணன் ஜதியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    மேலும்,  நாடாளுமன்ற இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள்,  மக்களவை செக்ரட்டரி ஜெனரல் ஸ்நேஹ்லதா  ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோரும் மலர் மரியாதை செய்தனர்.
    இந்நிகழ்ச்சியின்போது,  மக்களவை செயலகத்தால் லாலா லஜபதி ராய் வாழ்க்கை வரலாறு குறித்து ஆங்கிலம்,  ஹிந்தியில் வெளியிடப்பட்ட சிறு கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. 
    நாடாளுமன்ற மைய அரங்கில் லாலா லஜபதி ராயின் திருவுருவப்படம்  1956-ஆம் ஆண்டு,   நவம்பர் 17-ஆம் தேதி அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai