Enable Javscript for better performance
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு துணைநிலை ஆளுநர் பதில் கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு துணைநிலை ஆளுநர் பதில் கடிதம்

    By DIN  |   Published on : 30th January 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீலிங் நடவடிக்கை விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் திங்கள்கிழமை பதில் கடிதம் எழுதியுள்ளார்.
    இதுகுறித்து தில்லி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    தில்லியின் முக்கிய சந்தைகளில் தற்போது நடைபெற்று வரும் சீலிங் நடவடிக்கை விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் செளரவ் பரத்வாஜ் துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
    அக்கடிதத்திற்கு துணைநிலை ஆளுநர் பதில் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக புரிந்து கொள்ள சம்பந்தப்பட்ட வணிகர்கள்,
    மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோருடன் துணைநிலை ஆளுநர் ஏற்கெனவே பலமுறை சந்தித்து, ஆலோசனை நடத்தியுள்ளார்.
    சட்ட விதிகளுக்கும், நீதிமன்ற உத்தரவுக்கும் கட்டுப்பட்டு இந்த சீலிங் நடவடிக்கைக்கு தீர்வுகாண அனைத்து சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டுள்ளன. இந்த விவகாரம் மிகவும் சிக்கலானது. கலப்பு நில பயன்பாட்டு சாலைகள் அறிவிக்கை உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் ஆலோசனைகள் இருந்தால், அவை குறித்து தில்லி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மூலம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.
    மேலும், இந்த விவகாரம் லட்சணக்கனக்கானோரின் வாழ்வாதாரம், தில்லியின் திட்டமிட்ட வளர்ச்சி ஆகியவை தொடர்புடையது.
    சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளுக்கு துணைநிலை ஆளுநர் பாராட்டு தெரிவிப்பதுடன், இந்த விவகாரத்தை சிக்கலாக்க முயற்சிக்க வேண்டாம் என கடுமையாக அறிவுறுத்தியுள்ளார் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆலோசிக்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்சௌரவ் பரத்வாஜ் பதில் கடிதம்
    துணைநிலை ஆளுநரின் பதிலுக்கு செளரவ் பரத்வாஜ் எம்எல்ஏ பதில் கடிதம் எழுதியுள்ளார்.
    துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலுக்கு திங்கள்கிழமை மாலை சௌரவ் பரத்வாஜ் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
    சீலிங் நடவடிக்கை விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் துணைநிலை ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். எனது கடிதத்துக்கு துணைநிலை ஆளுநர் அலுவலகம் செய்திக்குறிப்பு வாயிலாக பதில் அளித்துள்ளதை பெருமையாக கருதுகிறேன்.
    இந்த விவகாரத்தில் ஆலோசனைகளை தில்லி அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மூலம் அனுப்பி வைக்குமாறு துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார். இதனால், தில்லி வளர்ச்சி ஆணையம் தொடர்பாக சில விளக்கங்கள் தேவைப்படுகிறது.
    அதிகரிக்கப்பட்ட தள பரப்பு விகிதத்தை (ப்ளோர் ஏரியா ரேஸியோ) தில்லி மாஸ்டர் பிளான்2021-இல் திருத்தம் செய்வதன் மூலம் தற்போது நடைபெறும் பெரும்பாலான சீலிங் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முடியும். தில்லி மாஸ்டர் பிளானில் திருத்தத்தை, துணைநிலை ஆளுநர் தலைமை வகிக்கும் தில்லி வளர்ச்சி ஆணையத்தால் மட்டுமே செய்ய முடியும்.
    இந்த விவகாரத்தில் தில்லி நகர்ப்புற வளர்ச்சித்துறை செய்ய வேண்டியது எதுவும் இல்லை. துணைநிலை ஆளுநருடன் சிறிது நேரம் கலந்து ஆலோசிக்க கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
    முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சிலர் சீலிங் விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநருடன் ஆலோசிக்க ராஜ்நிவாஸ் சென்று காத்திருந்தனர்.
    இதுகுறித்து சௌரவ் பரத்வாஜ் சுட்டுரையில் செய்த பதிவில், "துணைநிலை ஆளுநரைச் சந்திக்க அவரது வீட்டிற்கு வெளியே ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தடுப்புவேலி அமைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளோம்.
    உங்கள் வீட்டின் வெளியே நாங்கள் காத்திருந்தபோதும், வேறு வழியாக படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளீர்கள். உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai