Enable Javscript for better performance
ஆலோசனை நடத்த இன்று வருவதாக கேஜரிவாலுக்கு தில்லி பாஜக கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    ஆலோசனை நடத்த இன்று வருவதாக கேஜரிவாலுக்கு தில்லி பாஜக கடிதம்

    By DIN  |   Published on : 30th January 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீலிங் நடவடிக்கை விவகாரம் தொடர்பாக சந்தித்துப் பேச தங்கள் இல்லத்திற்கு வர உள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி பாஜக பொதுச் செயலர் ரவீந்தர் குப்தா திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
    இது தொடர்பாக முதல்வர் கேஜரிவாலுக்கு ரவீந்தர் குப்தா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
    தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தலைமையில் தில்லியைச் சேர்ந்த நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள், தில்லி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர்கள், வடக்கு, தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர்கள் செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு உங்களுடைய (கேஜரிவால்) வீட்டில் சந்திக்கவுள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக தில்லி பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: மனோஜ் திவாரி தலைமையில் தில்லி பாஜகவினர் செவ்வாய்கிழமை முதல்வர் இல்லத்திற்கு செல்லவுள்ளோம். தில்லியில் உள்ள 351 சாலைகளை உடனடியாக அறிவிக்கை செய்யுமாறு அவரைக் கோரவுள்ளோம். தில்லியில் நடைபெற்று வரும் சீலிங் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு அவரை வலியுறுத்தவுள்ளோம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    இது தொடர்பாக தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறியதாவது: சீலிங் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர தனக்குள்ள நிர்வாக மற்றும் தார்மிக பொறுப்பை தில்லி அரசு தொடர்ந்து தட்டிக் கழித்து வருகிறது. இது தொடர்பாக அரவிந்த் கேஜரிவாலுடன் பேச செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு அவர் வீட்டுக்கு செல்லவுள்ளோம். அவர் எங்களுடன் பேசுவார் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai