Enable Javscript for better performance
காரில் தீ விபத்து: தாய், மகன் எரிந்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஃபலீடா கிராமத்தில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் காரில் இருந்த தாயும், இரண்டரை வயது மகனும் தீயில் கருகி உயிரிழந்தனர். கடுமையான தீக்காயங்களுடன் தந்தை சிகிச்சைப் பெற்று வருகிறார்.
    இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலைய அதிகாரி ராஜ்வீர் சிங் சௌகான் கூறுகையில், "மதன் பால் சிங் என்பவர் தனது மனைவி, குழந்தையுடன் ரபுபுராவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஃபரீதாபாத்துக்கு ஞாயற்றுக்கிழமை இரவு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
    ஃபலீடா கிராமத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, மின்கசிவு காரணமாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். எனினும், காரில் இருந்த தாயும், மகனும் தீயில் கருகி உயிரிழந்தனர் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai