Enable Javscript for better performance
சிவிக் சென்டரில் இன்று உண்ணாவிரதப் போராட்டம்: ஆம் ஆத்மி- Dinamani

சுடச்சுட

    

    சிவிக் சென்டரில் இன்று உண்ணாவிரதப் போராட்டம்: ஆம் ஆத்மி

    By DIN  |   Published on : 30th January 2018 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீலிங் நடவடிக்கைக்கு எதிராக தில்லி மாநகராட்சிகளின் தலைமை அலுவலகமான சிவிக் சென்டரில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான கோபால் ராய் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை மாலை கூறியதாவது:
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதையொட்டி, மத்திய அரசின் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கு எதிராகவும், தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் சீலிங் நடவடிக்கைக்கு எதிராகவும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் படேல் செளக்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நாடாளுமன்ற சாலையில் அமைதியான வழியில் பேரணி செல்ல முற்பட்டோம்.
    அப்போது, தில்லி காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் ஆசுதோஷ், திலீப் பாண்டே, துர்கேஷ் பாதக் உள்ளிட்டோரை போலீஸார் காவலில் அடைத்தனர்.
    சீலிங் நடவடிக்கை தொடர்பாக ஆம் ஆத்மி எழுப்பி வரும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு பதிலாக, பாஜக அரசு காவல்துறையின் உதவியுடன் ஆம் ஆத்மி கட்சியினரின் குரலை ஒடுக்க தடியடி நடத்தியுள்ளது. பாஜக தலைமையிலான தில்லி மாநகராட்சிகள் நினைத்தால் சீலிங் நடவடிக்கையை நிறுத்தி வைக்க முடியும். மத்திய நகர்ப்புற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி வளர்ச்சி ஆணையம் நினைத்தால் தில்லி மாஸ்டர் 2021 திட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடியும்.
    இவ்வாறு சீலிங் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் வழிமுறைகளும் பாஜகவிடம் உள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில் வணிகர்களின் கோரிக்கையை பாஜக ஏற்பதாக இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநரைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி சட்டப்பேர வை உறுப்பினர்கள் அவரது அலுவலகத்துக்கு வெளியே காக்க வைக்கப்பட்டனர்.
    எனவே, இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு, தெற்கு தில்லி மாநகாராட்சிகளின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிவிக் சென்டர் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தைத் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
    இந்த போராட்டத்தில் கட்சியின் கவுன்சிலர்கள், தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார். பேட்டியின்போது கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆசுதோஷ் உடனிருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai