Enable Javscript for better performance
"சீலிங்' நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்: தொண்டர்கள் தாக்கப்பட்டதாக புகார்- Dinamani

சுடச்சுட

    

    "சீலிங்' நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்: தொண்டர்கள் தாக்கப்பட்டதாக புகார்

    By DIN  |   Published on : 30th January 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) அனுமதி, தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் சீலிங் நடவடிக்கை ஆகியவற்றுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் பட்டேல் செளக்கில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் சிலர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்தப் புகாரை தில்லி காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
    ஆம் ஆத்மி கட்சியினர் பட்டேல் செளக் மெட்ரோ நிலையம் வெளியே ஆர்ப்பாட்டத்திற்காக திரண்டனர். பின்னர் நாடாளுமன்ற நோக்கி புறப்பட்டனர். அவர்களை தில்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, தில்லி காவல்துறையினருக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களும், கவுன்சிலர்களும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அவர்கள் மீது தில்லி காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்துள்ளனர். இதில் கட்சியின் மூத்த தலைவர் ஆசுதோஷுக்கும், கட்சியின் பெண் தொண்டர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சிலரை கைது செய்து நாடாளுமன்ற சாலை காவல்நிலைய வளாகத்தில் அடைத்துள்ளனர்' என்றார்.
    காவல் துறை மறுப்பு
    தடியடி குறித்த ஆம் ஆத்மி கட்சியின் புகாருக்கு தில்லி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து புது தில்லி சரக துணை ஆணையர் பி.கே. சிங் கூறுகையில், "தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி சென்ற ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் சிலரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்தோம். ஆர்ப்பாட்டத்துக்கு முறையான அனுமதியும் பெறவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்தில் யாரையும் போலீஸார் அடிக்கவில்லை. தடியடி புகார் அடிப்படை ஆதாரமற்றது' என்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai