Enable Javscript for better performance
தில்லியில் தியாகராஜர் ஆராதனை விழா- Dinamani

சுடச்சுட

    

    இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம், சண்முகானந்தா சங்கீத சபா ஆகிய அமைப்புகள் இணைந்து 5-ஆவது தியாகராஜர் ஆராதனை விழாவை இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
    இந்நிகழ்ச்சி உமா அருண், சிதேஷ் கணேஷ், வைஷ்ணவி நாதன், விக்னேஷ், கங்கோத்ரி, அஷ்வினி ஆகிய இசைக் கலைஞர்கள் பங்கேற்ற வயலின் கச்சேரியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ண ரங்கனின் புல்லாங்குழல் கச்சேரி நடைபெற்றது.
    பின்னர், இசைக் கலைஞர் அலமேலு மணி மற்றும் அவரின் சீடர்கள் அருணா ரங்கநாதன், ராதிகா சந்திரமௌலி, சுப்பிரமணியம், சீதா ஸ்ரீகாந்த், ஜனனி ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    இந்நிகழ்வில் உள்ளூர் இசைக்கலைஞர்கள் ஜோதி ஸ்ரீதேவி, நாகலட்சுமி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    இந்நிகழ்ச்சிகளில் ஆர்.ஸ்ரீதர் வயலினும், ஆதித்ய நாராயணன், கும்பகோணம் என்.பத்மநாபன் ஆகியோர் மிருதங்கமும் , பாலகிருஷ்ண ரங்கன் புல்லாங்குழலும், ஹரிநாராயணன் கடமும் வாசித்தனர்.
    இந்திரா காந்தி தேசிய கலைகள் மைய, கலாதர்ஷனா தலைவர் அச்சல் பாண்டே இசைக் கலைஞர்களை வரவேற்று கௌரவித்தார்.
    ஞாயிற்றுக்கிழமை மாலை இசைக் கலைஞர் அலமேலு மணி நடத்திய பயிற்சி வகுப்பில் பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai